பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வயது குட்டியானை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அடுத்த கோடுபட்டி வனப்பகுதியில் இருந்து குட்டி யானை ஒன்று வழிதவறி வந்தது. இந்த குட்டி யானை முப்பது அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அந்த குட்டி யானையை வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் கூட்டத்துடன் சேர்ப்பதற்கு முயற்சி செய்தனர். 

ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததால் வனத்துறையினர் அந்த குட்டியானையை கடந்த 17 ஆம் தேதியன்று முதுமலையில் உள்ள தெப்பக்காடு  யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். 

மேலும்  இந்த குட்டி யானையை பராமரிக்கும் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி உள்ளிட்டோரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இந்த நிலையில், இந்தக் குட்டியானைக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால், வனத்துறையினர் நீண்ட நேரமாக மருத்துவ சிகிச்சை அளித்த நிலையில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three years old elephant died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->