தமிழகத்தில் 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆபர்..! இன்று முதல் அமலுக்கு வந்தது..! - Seithipunal
Seithipunal


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் 110 விதியின் கீழ் பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் பொருட்டு 3,501 அம்மா நகரும் நியாயவிலை கடைகள் 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இதற்கான ஒப்புதலை பெறப்பட்டு, தற்போது இந்த நகரும் நியாயவிலைகளை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்றனர். 

அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த நகரும் நியாயவிலைகளை பிரித்து வழங்ப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் இருக்கின்றன. இந்த நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்ற அந்த நாளில் பொது மக்கள் அரசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்குவதற்கும் தவறி விடுகிறார்கள். இதனால் பொது மக்களின் வீட்டிற்கு அருகாமையில் ரேஷன் பொருட்கள் கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்கக்கூடிய வகையில் அம்மா நகரும் நியாயவிலை கடைகள் மூலமாக இனி ரேஷன் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும்.

5 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரர்கள் இந்த நகரும் நியாயவிலைக் கடைகள் மூலமாக பயன் பெறுவார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட  2 கோடியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட 3,501 நியாய விலைக் கடைகள் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 437 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய இருக்கிறார்கள்.

மேலும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் முன்னோட்ட அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார். மின்சாரம், சூரிய ஒளி மின் ஆற்றலில் இயங்கும் 13 வகைகளைச் சேர்ந்த புதிய ஆட்டோக்களையும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three thousand moving ration shop scheme


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->