சென்னையில் மெட்ரோ பணியில் விபத்து - மூன்று பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. அதில், கிண்டி - போரூர் மற்றும் மவுண்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் கட்டுமான பணிகள் மிக விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அதிகாலை மாநகர பேருந்து ஒன்று குன்றத்தூரில் இருந்து போக்குவரத்து ஊழியர்கள் எட்டு பேருடன் ஆலந்தூர் நோக்கி மவுண்ட- பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. 

இதையடுத்து இந்த பேருந்து ராமாபுரம் அருகே சென்றது. அப்போது மெட்ரோ ரெயில் பணிக்காக இரும்பு கம்பிகளை "டிரெய்லர் லாரியில்" ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத கிரேனில் இருந்து இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து பேருந்து மீது விழுந்தது. 

இந்த விபத்தில் மாநகர பேருந்து ஓட்டுனர்கள் இரண்டு பேர் மற்றும் டிரெய்லர் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இது தொடர்பாக ராமாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தர்மேந்திர குமார் சிங் என்பவர் முன் அனுபவம் ஏதும் இல்லாமல் போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது. 

மேலும், அவருக்கு அனுபவம் உள்ளது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து கொடுத்து பிரபல கட்டுமான நிறுவனத்தின் என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக் மற்றும் பொன் சந்திரசேகர் உள்ளிட்ட இருவரையும் வேலைக்கு சேர்த்தது தெரிய வந்தது. 

இதையடுத்து, போலீசார் ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து என்ஜினீயர்கள் சிவனாந்த நாயக் மற்றும் பொன் சந்திரசேகர் உள்ளிட்ட இரண்டு பேரையும் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples injury in metro work accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->