ஓட்டை குவாட்டருக்கு விற்க முடிவெடுத்து, 2 மணிநேரம் ராவடி செய்த குடிகாரன்.. கோழியைப்போல அமுக்கிய காவல்துறை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் முதுலூர் பகுதியை சார்ந்தவர் ஜெபராஜ் (வயது 28). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெபா. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். 

ஜெபராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்குப்பதிவு செய்ய ஜெபராஜ் திட்டமிட்டுள்ளார். 

ஏற்கனவே மதுபோதையில் இருந்த ஜெபராஜுக்கு மேலும் மது ஆசையை ஏற்படுத்தும் பொருட்டு, எங்களுக்கு வாக்கு செலுத்தினால் குவாட்டர் பாட்டில் உடனடியாக தரப்படும் என்று அப்பகுதியை சார்ந்த ஒருகட்சி பிரமுகர் கூறியுள்ளார். 

இதனைநம்பிய ஜெபராஜ் மனைவியிடம் சென்று வாக்காளர் அடையாள அட்டையை கேட்கவே, இந்த தகவலை முன்னதாகவே அறிந்துகொண்ட ஜெபா வாக்காளர் அடையாள அட்டையை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

மனைவியிடம் நீண்ட நேரம் போராடியும் பலனில்லாததால் மனமுடைந்த ஜெபராஜ் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, தட்டார்மடம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், தூத்துக்குடி டி.ஜி.பி தலைமையிலான காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 

பேச்சுவார்த்தையின் முடிவில் சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் கீழே வந்த ஜெபராஜை கோழியை அமுக்குவதுபோல அமுக்கிய காவல் துறையினர், சிறப்பு கவனிப்பிற்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், காவல் நிலையத்திற்கு செல்லும்போதும், தனது மனைவி குறித்து போதையில் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை காவல் துறையினரிடம் கூறியபடியே ஜெபராஜ் சென்றார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sathankulam Drunken Culprit Jeparaj make outrage Dunked Alcohol for Vote Selling


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal