தம்பிக்கு பெண் பார்ப்பதில் தகராறு.. மனைவிக்கு டார்ச்சர்.. வீடியோ பதிவு செய்து பெண் மனமுடைந்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சுபா நகர் சுதர்சன் கார்டன் பகுதியை சார்ந்தவர் அமல்தாஸ் (வயது 58). இவரது மகள் சுஜா (வயது 30). சுஜாவிற்கும் - விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர். நகர் மணிபாறைப்பட்டி பகுதியை சார்ந்த வீரராகவன் என்பவருக்கும், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இந்த தம்பதிகளுக்கு ஜோகித் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுஜாதாவின் சகோதரியை, வீரராகவனின் சகோதரர் கார்த்திக் என்பவருக்கு பெண் கேட்டுள்ளனர். இந்த விஷயத்திற்கு அமல்தாசின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இதனால், கணவன் - மனைவியான சுஜா - வீரராகவனுக்கு இடையே தகராறு எழுந்து வந்துள்ளது. குடும்ப சண்டையால் மன விரக்திக்கு உள்ளகியா சுஜா பெற்றோரின் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  

இந்த விஷயம் தொடர்பாக சுஜாவின் தந்தை கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சுஜா மரணத்திற்கு முன்னதாக வீடியோ பதிவு செய்தது கைப்பற்றப்பட்டது. 

இந்த வீடியோவில், " எனது மரணத்திற்கு எனது கணவர், அவரது குடும்பத்தினர் மட்டுமே காரணம். அவர்கள் செய்த சித்ரவதையால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் " என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Kovilpatti woman suicide due to husband and his family torture 1 May 2021


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->