தென்தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலை.. உன் சாதிக்காரன் நானிருக்க, அவனை காதலிப்பியா?..! தலைதுண்டித்து இளைஞர் படுகொலை.! - Seithipunal
Seithipunal


ஜாதி மாறி காதல் செய்த பெண்ணின் கணவன், சொந்த ஜாதிக்காரனால் வெட்டி படுகொலை செய்யப்பட்டான். உன் ஜாதிக்காரன் நான் இருக்க, உனக்கு இன்னொரு ஜாதிக்காரனுடன் காதாலா? என ஆணவப்பட்டு ஆனந்தராஜ் கொலைகாரன் ஆன பின்னணி.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி குமாரகிரிபுதூர் கிராமத்தை சார்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் சூரிய ராகவன் (வயது 31). சூரிய ராகவன் எட்டயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை அருகேயிருக்கும் உறவினருக்கு சொந்தமான தொலைக்காட்சி பழுதுநீக்கும் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல சூரிய ராகவன் கடையில் பணியாற்றிக்கொண்டு இருக்கையில், அங்கு வந்த மர்ம நபர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சூரிய ராகவனை தலையை வெட்டி கொலை செய்து தப்பி சென்றனர்.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் காவல் துறையினர், சூரிய ராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், சூரிய ராகவனை கொலை செய்தது சோழபுரம் பகுதியை சார்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஆனந்த ராஜ் (வயது 22) என்பது தெரியவந்தது. ஆனந்தராஜ் கேட்டரிங் பயிற்சி முடித்துவிட்டு விழாக்களில் சமையல் செய்யும் பணிகளை செய்து வந்துள்ளார்.

சூரிய ராகவனுக்கும் - படர்ந்தப்புளி கிராமத்தை சார்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகாலட்சுமி சூரிய ராகவன் கடைக்கு அருகே இருக்கும் தட்டச்சு பயிற்சி மையத்திற்கு வந்து செல்கையில் ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே, இருதரப்பும் வெவ்வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்த நிலையில், மகாலட்சுமியை சூரிய ராகவன் காதலித்து வந்த சமயத்தில் ஆனந்தராஜும் காதலித்து வந்துள்ளார். ஆனந்தராஜ் தனது காதலியை மகாலட்சுமியிடம் தெரிவிக்கையில், அவர் சூரிய ராகவனை நான் காதலிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த ராஜ், நீயும் - நானும் ஒரே ஜாதி, என்னை நீ காதலிக்காமல் மாற்று சமூகத்தை சார்ந்த சூரிய ராகவனை ஏன் காதலிக்கிறாய்? என பிரச்சனை செய்துள்ளார். மேலும், காதல் ஜோடியான மகாலட்சுமி - சூரிய ராகவன் மீது ஆனந்த ராஜ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

இந்த தருணத்தில், காதல் ஜோடி திருமணம் செய்த தகவல் ஆனந்தராஜின் காதுகளை எட்ட, அவர் சூரிய ராகவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொலைக்காட்சி ஒன்றை பழுதாகி, சூரிய ராகவனின் கடையில் பழுது நீக்க கொடுத்துள்ளார். இந்த தொலைக்காட்சி நேற்று பழுது சரி செய்யப்பட்டு கொடுக்க தயாராக இருந்த நிலையில், திட்டமிட்டபடி தொலைக்காட்சியை வாங்க செல்வது போல சென்று, ஆட்டை வெட்டும் கத்தியை வைத்து சூரிய ராகவனை ஆனந்த ராஜ் கொலை செய்துள்ளார்.

மேலும், கொலை நடப்பதற்கு முன்னதாக, "நான் காதல் செய்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்திருக்கலாம்?" என்று வினவிய ஆனந்த ராஜ், சூரிய ராகவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திட்டமிட்டபடி கொலை அரங்கேறியுள்ளது. சூரிய ராகவனின் தலையை கையில் பிடித்தவாறு பார்த்துவிட்டு அங்கேயே வீசிவிட்டு ஆனந்த ராஜ் சென்றுள்ளார். எட்டயபுரம் காவல் துறையினர் தற்போது ஆனந்தராஜை கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Ettaiyapuram Love Married Man Surya Ragavan Murder by Ananda Raj Due to Inter Caste Love Issue


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal