திருவாரூரில் அரைமணிநேரமாக மழை..மக்கள் மகிழ்ச்சி!!
Thiruvarur rain people happy
காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் 110 டிகிரியை தாண்டி வீசுகிறது. சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் ஏற்ற இறக்கதுடன் காணப்பட்டு வந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அரைமணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Thiruvarur rain people happy