பாம்பு கடித்து ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததாக வந்த செய்தியில் உண்மை இல்லை- திருவாரூர் மருத்துவக்கல்லூரி டீன் மறுப்பு..! - Seithipunal
Seithipunal


பாம்பு கடித்து 5 பேர் உயிரிழந்ததாக வந்த செய்தி பொய் என திருவாரூர் மருத்துவகல்லூரி டீன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பாம்பு கடித்து 5 பேர் ஒரே நாளியோல் சிகிச்சைக்கு வந்தாகவும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில்,  மருத்துவகல்லூரி டீன் தெரிவிக்கையில்,

பாம்பு கடித்து 5 பேர் ஒரே நாளில் இறந்ததாக வெளிவந்த செய்திகளில் உண்மை இல்லை எனவும் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மட்டும் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். மேலும், பாம்பு கடிக்கு உரிய  மருந்துகள் இருப்பதாகவும் பாம்பு கடித்ததும் விரைந்து வந்தால் இறப்பு விகிதத்தை குறைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Medical College dean says about the fake news


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->