ஊர் ஊராக கொள்ளையடித்து, நகை கடை நடத்திய கொள்ளையர்கள்.! வெளியான பகிர் தகவல்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது வீட்டில், கடந்த டிசம்பர் மாதம் 77 சவரன் தங்க நகை கொள்ளை போனது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு கைரேகை உள்ளிட்ட எந்த தடயமும் சிக்கவில்லை.

இதையயடுத்து வி.எம்.சத்திரம் பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு நடத்திய போலீசார் போலி நம்பர் பிளேட்டுடன் கார் ஒன்று சென்றதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து டோல்கேட், உணவகம், வணிக நிறுவனங்கள் கொள்ளை போன வீட்டிலிருந்து  400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 460 சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போலீசார், அந்தக் போலி நம்பர் பிலேட் கொண்ட கார் சென்ற திசையை கண்டுபிடித்தனர்.

அந்த போலி நம்பர் பிலேட் கொண்ட கார் 100 கிலோ மீட்டர் சென்றதும் மாயமாகி, பின் வேறொரு நம்பர் பிளேட்டுடன் அந்த சார் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மூன்றாவது முறையாகவும் அந்த கார் நம்பர் பிளேட் மாற்றப்பட்டு திருப்பூரில் காணாமல் போகிறது. இதையயடுத்து அந்த திருப்பூர் சென்ற அந்த காரிலிருந்து 4 பேர் இறங்குவது ஒரு ஹோட்டல் சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது.

அந்த ஹோட்டல் சிசிடிவி காட்சியில் உள்ள உருவத்தை வைத்து அடையாளம் கண்ட நெல்லை போலீசார், திருப்பூரில் வைத்து முகமது ரபீக், யாசர் அராபத், குருவி சக்தி, ராமஜெயம் உள்ளிட்ட நான்கு பேரை கொத்தாக பிடித்து போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சொகுசு காரில் வலம் வந்து, பூட்டிய வீடுகளை கண்காணித்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் என்றும், 50 க்கும் மேற்பட்ட ஊர்களில் கொள்ளையடித்துள்ளதாகவும், திருப்பூரில் மங்களம் நகைக்கடை என்ற பெயரில் நகை கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இந்நிலையில், தாங்கள் நடத்தி வந்த நகை கடையின் வியாபாரம் பெருக குலதெய்வத்தைக் கும்பிட கூட்டாளிகளுடன் நெல்லை வந்த குருவி சக்தி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் போலீசில் சிக்கிக் கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirunelveli gold theft in house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->