குழந்தை தொழிலாளர்கள் என்னும் அவலத்தை துடைத்தெறிக.. திருமாவளவன் வலியுறுத்தல்..!!..!! - Seithipunal
Seithipunal


குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது உலகின் மிகப்பெரிய சட்ட விரோதச் செயலாக பார்க்கப்படுகிறது. இயற்கைக்கு முரணான ஒரு சமூகக் குற்றமாகும். குழந்தைகளின் கனவுகளை களைப்பதற்கு ஈடான வன்செயல் எதுவும் இல்லை. ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். 14 – 18 வயதிற்குட்பட்ட வாலிபர்கள் எந்த அபாயகரமான தொழிலிலும் வேலை செய்யக்கூடாது. குழந்தை தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா 2012 இன் கீழ், வேலைக்குச் செல்லும் வயதுக்குட்பட்ட குழந்தையின் பெற்றோருக்கும் தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் "#சூன்_12: இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள். உலகெங்கும் குழந்தைகள் யாவருமே கல்விபெற வேண்டும். விளையாட வேண்டும். மாறாக, வறுமையைக் காரணம் காட்டி, பெற்றோராயினும் அவர்களைத் தொழிலாளர்களாக வதைத்திடக் கூடாது. அந்த வன்கொடுமையை வன்மையாக எதிர்ப்போம்.

புரட்சியாளர் அம்பேத்கர் குழந்தை தொழிலாளர் முறையைக் கடுமையாக எதிர்த்ததோடு அதற்கு எதிராக சட்டமும் கொண்டு வந்தார். இந்நாளில் அவரை நன்றியுணர்வோடு நினைவுகூர்வோம். இந்திய கூட்டரசும் மாநில அரசுகளும் குழந்தை தொழிலாளர் முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்" என பதிவிட்டுள்ளார்.

ஆனால் சமீபத்தில் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றப்பட்டது தொடர்பாக விவகாரத்தில் திருமாவளவன் அரசுக்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirumavalavan urged govt to abolish child labour system


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->