"திமுக அமைச்சர்களின் அலப்பறைகள்" என்று ஒரு படமே எடுக்கலாம்! திமுகவை கலாய்த்த முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


ஊடகங்களில் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு திமுக அமைச்சர்கள் உள்ளனர்!

தனது இரு சிறு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் நகைச்சுவை நடிகர் போண்டாமணி. அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் திரையுலகினர் மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். நடிகர் போண்டாமணி சிகிச்சைக்குப் பின் போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். 

அவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அதிமுகவின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளித்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

ஜெயக்குமார் கூறுகையில் "திமுக ஆட்சி சர்வாதிகாரப் போக்குடன் நடைபெறுகிறது. அதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களும் அலப்பறைகளை செய்கின்றனர். திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் செய்யும் செயல்களை வைத்து திமுக அமைச்சர்களின் அலப்பறைகள் என்ற ஒரு படத்தையே எடுக்கலாம் என கலாய்த்தார்.

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அரசு ஊழியர்களை பார்த்து கைகால்களை உடைத்து விடுவேன் என மிரட்டுகிறார். அமைச்சர் பொன்முடி பெண்களைப் பார்த்து ஓசி ஓசி என சொல்லிவிட்டு இன்று விளையாட்டாக சொன்னேன் என பேட்டியளிக்கிறார். அதற்காக செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்கிறார். இது பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை அவமானம் படுத்துவதாக உள்ளது என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There are DMK ministers to the extent of apologizing to people in the media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->