செல்ல நாய் சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு கொண்டாட்டம்.. குடும்பத்தினர் நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


கருவுற்று இருந்த நாய்க்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள உப்புக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சார்ந்தவர் குமரேசன் (வயது 43). இவர் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அம்சவேணி (வயது 38). இவர்களுக்கு தமிழ்செல்வன் என்கிற 22 வயது மகனும், கல்பனாதேவி என்கிற 18 வயது மகளும் உள்ளனர். 

சிறுவயதில் இருந்தே குமரேசனுக்கு செல்லப்பிராணிகள் வளர்க்கும் விஷயங்களில் அதிகளவு ஆர்வம் இருந்து வந்த நிலையில், அவரது வீட்டில் நாட்டு நாய், போமெரியன், கொம்பை, லேபர் டாக், சிப்பிபாறை என 10 க்கும் மேற்பட்ட வகையான நாய்கள் உள்ளன. 

இந்நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக தெருவில் சுற்றித்திரிந்த பெண் நாய் ஒன்றை வீட்டிற்கு அழைத்து வந்த குமரேசன், நாய்க்கு சில்க் சுமிதா என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார். நாய் தற்போது கருவுற்று இருந்த நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். 

இதனையடுத்து, உறவினர்கள் முன்னிலையில் சில்க் சுமிதாவுக்கு பிடித்தமான எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம், கேசரி என 5 உணவுகளை பரிமாறி வழங்கப்பட்டது. புதிய ஆடை அணிவித்து, மாலை போட்டு, வளையல் மாட்டி, முகத்தில் சந்தானம் மற்றும் குங்குமம் வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni Pregnant Dog Baby Shower Function by Family Members


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal