ஊராட்சி மன்ற தலைவரான 21 வயது பொறியியல் பட்டதாரி..!! - Seithipunal
Seithipunal


21 வயது பொறியியல் பட்டதாரி பெண் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டுகட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை  நேற்றிலிருந்து நடைபெற்று வரும் நிலையில் தென்காசியில் 21வயது நிரம்பிய இளம்பெண் ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லெட்சுமியூர் கிராமத்தைச் சேர்ந்த சாருகலா (21) என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டிருந்தார்.

பொறியியல் பட்டதாரியான இவர் 796 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றிபெற்றார்.  கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவே இந்த தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சாருகலா 3336 வாக்குகள் பெற்றது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The young woman who is the president of the Panchayat Council


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->