CBSC தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி..வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்திய MLA!
The student who topped the CBSC exam MLA congratulated her by visiting her home
குளுனி பள்ளியில் CBSC பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் இல்லத்துக்கு நேரு(எ)குப்புசாமி MLA சென்று மாணவியை வாழ்த்தி பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலம், உருளையன் பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இளங்கோ நகர் வார்டுராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த குளுனி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த CBSC மாணவிசஹானா D/O வீரராகவன்500/495.மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவியை பாராட்டும் விதமாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் மாணவியின் இல்லத்துக்கே சென்று மாணவியை வாழ்த்தி பொன்னாடை போற்றி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் உயர் கல்வியிலும் இதுபோன்று சிறந்த மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழவேண்டும் என மாணவியை வாழ்த்தினார் நிகழ்ச்சியின் போது மாணவியின் பெற்றோர்கள், உறவினர்களும் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
English Summary
The student who topped the CBSC exam MLA congratulated her by visiting her home