ஜெபத்திற்கு வந்த பெண்ணை சீரழித்த கிருத்துவ மதபோதகரின் மகன்! - Seithipunal
Seithipunal


ஆடியோ ஆதாரத்துடன் போலீஸ் நிலையம் சென்ற பெண்! குடும்பத்துடன் தலைமறைவான மத போதகர்!

கிருத்துவ சபைக்கு ஜெபம் செய்ய சென்ற இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கிறிஸ்தவ மத போதகரின் மகன் சீரழித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை சியோன்புரத்தைச் சேர்ந்த மத போதகர் டேவிட் ஜேக்கப் ராஜ் இவர் அப்பகுதியில் கிறிஸ்துவ சபை நடத்தி வருகிறார் அவரின் மகனும் மனைவியும் உதவியாக இருந்துள்ளனர்.

அந்தக் கிருத்துவ சபைக்கு ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் ஆராதனையில் பங்கேற்க குடும்பத்துடன் பலர் வந்துள்ளனர். அச்சபைக்கு பிரார்த்தனைக்கு வந்த வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் மத போதகரின் மகன் அனீஸ் பவுலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பாகப் பழகி வந்த அந்த பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். "நாம் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம்" என்ற ஆசை வார்த்தை பேசி ஏமாற்றியுள்ளார். பின்னர் அந்தப் பெண் அனீஸிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். 

அதற்கு அனீஸ் மறுக்கவே மத போதகர் டேவிட் ஜேக்கப் ராஜ் மற்றும் மனைவி பிரின்ஸியிடம் நடந்த விஷயங்களை பெண் கூறியுள்ளார். ஆனால் அந்தப் பெண் ஏழை என்பதால் மத போதகரின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து அவரை மிரட்டி அனுப்பியுள்ளனர். 

இதனால் மனமுடைந்த அந்தப் பெண் பணகுடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அதற்கு ஆதாரமாக மத போதகர் அவருடைய மகன் மற்றும் அந்த பெண் மூவரும் பேசிய ஆடியோவை தந்துள்ளார். தற்பொழுது அந்த ஆடியோ ஆனது வைரலாகி வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த மூவரும் தலைமறைவாகி விட்டனர். மத போதகர் அவருடைய மனைவி அவருடைய மகன் ஆகிய மூவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The son of the Christian priest who raped the woman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->