சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறப்பு!
The Sabarimala temple will open this evening
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேவபிரசன்னத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோவில்பிரதிஷ்டை விழா, ஞாயிற்றுக்கிழமை (13 ஜூலை) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாளிகப்புரத்தம்மன் கோவிலில் புதிய நவக்கிரக கோவில் கட்டப்பட்டதை தொடர்ந்து, அதன் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, சபரிமலை கோவில் நடை இன்று (11 ஜூலை 2025) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தேவபிரசன்னத்தின் அடிப்படையில் இந்த நவக்கிரக கோவில் கட்டப்பட்டுள்ளது. அதன் பிரதிஷ்டை விழா, ஞாயிற்றுக்கிழமை (13 ஜூலை) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று நடை திறப்பை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
ஜூலை 12 (சனிக்கிழமை): சுத்தி கலச பூஜை நடைபெறும்.ஜூலை 13 (ஞாயிற்றுக்கிழமை):காலை 11 மணி: நவக்கிரக கோவில் பிரதிஷ்டைஇரவு 10 மணி: வழக்கமான பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும்இதனுடன், ஆடி மாத பூஜைகளுக்காக கோவில் நடை ஜூலை 16-ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும்.ஜூலை 17 முதல் 21 வரை (5 நாட்கள்) ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நாட்களில் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
English Summary
The Sabarimala temple will open this evening