தள்ளுபடி செய்யப்பட்ட வேட்புமனு! சுயேச்சை வேட்பாளர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் பெரும் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கோவையில்  நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மனுக்களை பரிசீலனை செய்த தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ராஜாமணி நூர்முகமது, யுவராஜ், உமர் அலி, சுந்தர்ராஜ், மணி ஆகிய சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

      

 மேலும் இது குறித்து சுயேச்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எழுத்துப் பூர்வமாக தகவலும் அளிக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள் எந்த  காரணமில்லாமல், வேண்டுமென்றே எங்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்று கூறி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 இந்நிலையில் வேட்பாளர் மணி என்பவர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்து உருண்டு போராட்டம் செய்தார். அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், அவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து அவர்கள் சென்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the nomination papre rejected to independent candidates in coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->