தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை மையம் எச்சரிக்கை..!
The Meteorological Department has warned of heavy rains in Tamil Nadu
வரும் ஆகஸ்ட் 17 மற்றும் ஆகஸ்ட் 19 ஆகிய 2 நாட்களும் தமிழகத்தில் கனமழை செய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 04 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
அத்துடன், வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 05 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது தவிர இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கனமழை பெய்யும் போது சில இடங்களில் வலுவான இடி மற்றும் மின்னல் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
English Summary
The Meteorological Department has warned of heavy rains in Tamil Nadu