அய்யனாரப்பன் ஆலய மகா கும்பாபிஷேகம்..திரளான பக்தர்கள் சாமி தரிசனம்! - Seithipunal
Seithipunal


கீழ்பென்னாத்தூர் அருகே அருள்மிகு அய்யனாரப்பன் ஆலய அஷ்டபந்தன புராணவர்த்தன மகா கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தில் அமைந்துள்ள  அருள்மிகு  அய்யனாரப்பன் ஆலய அஷ்டபந்தன புராணவர்த்தன மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது.

   இதில் முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம்,  மங்கள இசை, குரு வந்தனம், கிராம வேதா பிரார்த்தனை, விநாயகா அபிஷேகம், கோபூஜை, முதல் யாகசாலை பூஜை,  மஹாபூர்ணாஹீதி, சாந்தி ஓமம், தம்பதி பூஜை, இரண்டாம் யாககால பூஜை, 108 கலச அபிஷேகம்  உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  கலச புறப்பாடு  நடைபெற்று அருள்மிகு அய்யனாரப்பன் ஆலய கோபுர  உச்சியில் கலச புனித நீர் ஊற்றப்பட்டு மூலஸ்தானத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று . புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. பின்பு தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The grand consecration of Ayyanarappan Temple A multitude of devotees seeking divine vision


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->