கருப்பண்ண சுவாமி அவதரித்த நாள்.. கிடா வெட்டி பொங்கல் வைத்த பக்தர்கள்!
The day Karuppanna Swami appeared devotees offering Pongal with enthusiasm
ஆரணி அருகே ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி அவதரித்த நாள் மற்றும் இரண்டாம் ஆண்டு கிடா வெட்டு பூஜை வெகு விமர்சையாக பக்தர்கள் கொண்டாடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் இரும்பேடு கிராமம் ஏரிக்கரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ பால கருப்பண்ண சுவாமி மற்றும் அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி ஆலயத்தில் கருப்பண்ண சுவாமி அவதரித்த நாள் மற்றும் இரண்டாம் ஆண்டு கிடா வெட்டு பூஜை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஆலய ஸ்தாபகர் ஜே.பி. பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் பால், தயிர், சந்தனம், இளநீர்,விபூதி, உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு ஸ்ரீ பாலகருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் பம்பை மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் கிடாவெட்டி பொங்கல் இட்டு கருப்பண்ண சுவாமிக்கு படையல் இட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதில் பிரகாஷ் சுவாமி மீது கருப்பண்ண சுவாமி இறங்கி கத்தி மற்றும் ஆணி பாதகை மீது நின்று பக்தர்களுக்கு அருள் வாக்களித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் மாநிலத் தலைவர் ஆவடி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
English Summary
The day Karuppanna Swami appeared devotees offering Pongal with enthusiasm