குதிரையேற்ற வீரரை கரம்பிடிக்கும் ஆப்பிள்' நிறுவனத்தின் இணைநிறுவனரின் மகள்..வெளியான தகவல்! - Seithipunal
Seithipunal


ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற குதிரையேற்ற வீரர் ஹாரி சார்லஸ் என்பவர் ஆப்பிள்' நிறுவனத்தின் இணைநிறுவனரின் மகள் ஈவ் ஜாப்ஸ் கரம்பிடிக்க உள்ளார். சுமார் 6.7 மில்லியன் டாலர் செலவில் ஆடம்பரமான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தொழிலதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் 'ஆப்பிள்' நிறுவனத்தின் இணைநிறுவனராக இருந்து வந்தார்.27 வயதான இவருடைய  மகள் ஈவ் ஜாப்ஸ். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று  மாடலிங் துறையில் கால்பதித்து சாதித்து வந்ததுடன் , முன்னணி பிராண்ட்டுகளின் மாடலாக திகழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில்,   ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற குதிரையேற்ற வீரர் ஹாரி சார்லஸ் என்பவர் ஈவ் ஜாப்ஸ் கரம்பிடிக்க உள்ளார் என்றும் விரைவில்திருமணம்  நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 6.7 மில்லியன் டாலர் செலவில் ஆடம்பரமான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அதற்கான  ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருமண விழாவில்,  முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் கலந்து கொள்ள உள்ளார். மேலும் விழாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் எல்டன் ஜானின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குதிரையேற்ற வீரரை கரம்பிடிக்கும் ஆப்பிள்' நிறுவனத்தின் இணைநிறுவனரின் மகள் ஈவ் ஜாப்சின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது., அவரது தாயின் சொத்து மதிப்பு சுமார் 21.7 பில்லியன் டாலராக இருந்தாலும், அதில் ஈவ் ஜாப்சுக்கு எந்த பங்கீடும் இருக்காது என்று லாரன் போவேல் தெளிவுபடுத்தியுள்ளார்.

6 வயதில் இருந்து குதிரையேற்ற பயிற்சிகளை பெற்று வரும் ஈவ் ஜாப்ஸ், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த இவர், கொரோனா பரவல் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். 2019-ம் ஆண்டு, 25 வயதுக்கு உட்பட்ட உலகின் தலைசிறந்த குதிரையேற்ற வீராங்கனைகளின் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The daughter of the co-founder of the Horse-Riding Warriorcompany is the one who takes hold of the apple revealed information


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->