3 வேளை.. சோத்துக்கு அடிமையாக வேலை பார்க்கும்.. குழந்தை தொழிலாளர்கள்.. சென்னையில் பகீர்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை அடைத்து வைத்து உணவு மட்டுமே கொடுத்து வேலை வாங்கி வந்த வழக்கில் குழந்தைகள் நலத்துறை உதவி ஆணையர்  ஜெயலட்சுமி  நடவடிக்கையின் பேரில் அந்த குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களை வேலைக்கு வைத்திருந்த நிறுவனத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மண்ணடியில்  இருக்கும் மலையப்பன் தெருவில் இயங்கி வரும்  பேக் தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தைகள் அடைக்கப்பட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக குழந்தைகள் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமிக்கு வந்த தகவலை தொடர்ந்து  தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்  அரசு குழந்தைகள் நல குழுவினர் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் அந்த குடோனில் சோதனை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த குடோனிலிருந்து பத்து முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சம்பளமின்றி மூன்று வேளை உணவு மட்டுமே கொடுக்கப்பட்டு  வேலை செய்து இருக்கின்றனர் என்ற உண்மை தற்போது வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

குழந்தைகள் குடோனில் அடைக்கப்பட்டு வெறும் உணவிற்காக மட்டுமே வேலை வாங்கிய சம்பவம் சென்னை பகுதியில் அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The brutality of North State child laborers in Chennai Mannadi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->