மது போதையில் தள்ளாடிய மாப்பிள்ளை... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு..! - Seithipunal
Seithipunal


திருமணத்தின் அன்று மணமகன் மது போதையில் இருந்ததால் மணப்பெண் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் இவருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
அவர்களின் திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நடைபெற இருந்தது.

இதற்காக மணப்பெண்ணும் அவரது உறவினர்களும் பேருந்தில் கோவிலுக்கு வந்தனர். நீண்ட நேரமாகியும் மணமகன் வீட்டில் இருந்து யாரும் வராததால் சந்தேகமடைந்த அவர்கள் மணமகன் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அவர்கள் அங்கு கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடக்கிறது என தெரியாமல் மணமகன் மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மணப்பெண் மாலையை கழற்றி வீசி விட்டு எனக்கு திருமணமே வேண்டாம் என அங்கிருந்து சென்று விட்டார்.

மணப்பெண்ணின் தந்தை திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை திருப்பி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதனை அடுத்து மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமகளிடம் இனி நான் குடிக்க மாட்டேன் என கெஞ்சியும் அந்த இளம்பெண் திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The bride who stopped the wedding because the groom was drunk


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->