சொந்த வீட்டிலேயே 52 பவுன் நகைகளை கொள்ளையடித்த சிறுவன்..! - Seithipunal
Seithipunal


மகன் பெற்றோருக்கு தெரியாமல் 52 பவுன் நகையை திருடிய சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், பல்கலை நகரை சேர்ந்த ஒருவர் தனது பீரோவில் உள்ள 52 பவுன் தங்க நகைகள் மாயமானதாக காவல்துறையினருக்கு புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் வீட்டில் உள்ள வேலைகாரர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.ஆனால், அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அந்த நகைகளை குடும்பத்தினர் திருடி இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரின் 13 வயது மகன் அந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து அந்த மாணவன் அளித்த வாக்குமூலத்தில் ஆன்லைனில் விளையாட அதிக பணம் தேவைப்பட்டது.

அதனால்,உடன் படிக்கும் நண்பர்களிடம் கடன் கேட்டேன் ஆனால், அவர்கள் தரவில்லை அப்போது நண்பன் ஒருவன் கோச்சடையில் அண்ணன் ஒருவரை தெரியும். அவரிடம் நகை கொடுத்தால் பணம் கொடுப்பார் என்று தெரிவித்தான்.

இதனை அடுத்து, வீட்டு பிரோவில்  இருந்த 52 பவுன் நகைகளை எடுத்து சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boy who looted 52 worth of jewelery from his own home


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->