குப்பை மேட்டில் கிடந்த பெண்குழந்தை., பிறந்து சில மணி நேரத்தில் வீசி சென்ற அவலம்..!! - Seithipunal
Seithipunal


பச்சிளம் குழந்தையை குப்பை மேட்டில் வீசியவர்கள் யார் என காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூளேஸ்வரர்பட்டியில் தமிழ் தொடக்கபள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகில்  இருக்கும் இடத்தில் அங்குள்ள மக்கள் குப்பைகளை கொட்டுவர்.

அந்த பகுதியில் நீண்ட நேரமாக குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் குழப்பமடைந்த அருகில் உள்ளவர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு கட்டபையில் இருந்து குழந்தையின் சத்தம் கேட்கவே அந்த பையை திறந்து பார்த்தனர்.

அந்த பையில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன பெண் குழந்தை இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவலளித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகள் இல்லை என பலர் வருத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பிறந்த குழந்தையை இப்படி குப்பை மேட்டி போட்டு சென்றது யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The baby was thrown in the trash within hours of being born


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->