அடைக்கலமாதா ஆலய 3 ஆம் ஆண்டு பெரு விழா தேர் பவனி.. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
The 3rd anniversary grand festival procession of the Adhaikalamatha temple Many Christians participated
ஆண்டிபட்டியில் அடைக்கலமாதா ஆலய 3 ஆம் ஆண்டு பெரு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாதா தேர் பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கான அடைக்கலமாதா தேவாலயத்தின் சார்பில் மாதா தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம் பழமை வாய்ந்தது. இந்த தேவாலயத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது. தற்போது மூன்றாம் ஆண்டு பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
நேற்று 30 ஆம் தேதி விசேஷ திருப்பலி கோவிலில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அடைக்கலமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது .கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பில் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அப்போது பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் பாடல்கள் பாடியபடியும் ,ஜெபம் செய்த படியும் நடந்து வந்தனர்.
அதனை தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது .விழா நிகழ்ச்சிகளுக்கு தேனி மாவட்ட அருள் தந்தை முத்து அவர்கள் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேவா மிஷனரி அருள் சகோதரிகள் மற்றும் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
The 3rd anniversary grand festival procession of the Adhaikalamatha temple Many Christians participated