#தஞ்சாவூர்|| அரசுப்பள்ளியில் +2 பொதுத்தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர்க்கு ரூ.1 லட்சம் பரிசு..! மாணவர்களிடையே உற்சாகம்.,! - Seithipunal
Seithipunal


ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் +2 பொதுத் தேர்வில் முதல் இடம் பிடிக்கும் மாணவருக்கு, ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை அடுத்த ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் உள்ள இலுப்பைத்தோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

இதில்,  நிகழாண்டு +2 பொதுத் தேர்வில் 28 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். 

அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசா௧ ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக எழுபது ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக நாற்பது ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான நோட்டீஸ்களை மாணவர்களிடம் வழங்கி உள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thajavur govt school prize announce


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal