வரும் 5 ஆம் தேதி முதல் ஜவுளித் தொழில் நிறுத்தம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்தாலும், அதற்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் தான் முக்கிய இடத்தில் உள்ளது. பஞ்சாலைகள், நூற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி, கைத்தறி உள்ளிட்டவை மூலமாக பலரும் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

அதிலும் குறிப்பாக, இந்த ஜவுளித்தொழில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ஆடைகள் ஏற்றுமதி செய்து டாலரின் வருமானம் ஈட்டுவதால் "திருப்பூர் டாலர் சிட்டி" என்றே அழைக்கப்படுகிறது.

இதற்கிடையே, நூல் விலையேற்றம், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும் என்று ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் மற்றும் கோவையில் வரும் 5-ம் தேதி முதல் அனைத்து ஜவுளி தொழில் உற்பத்தியும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலையேற்றம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நவம்பர் 5 முதல் 25-ம் தேதி வரை இருபது நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

textile industry production stooped coming 5th in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->