தென்காசி: பிளீச்சிங் பவுடரை சாப்பிட்டு எலும்பும் தோலுமாக மாறிய 5 வயது சிறுமி.. மருத்துவ உதவிக்காக கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


ப்ளீச்சிங் பவுடரை தவறுதலாக சாப்பிட்டு சிறுமி உடல் நலம் பாதித்து உணவு உட்கொள்ள முடியாமல் எலும்பும் தோலுமாக மாறிய சோகம் அரங்கேறியுள்ளது. 

தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சீதாராஜ். இவரது மனைவி பிரேமா. இந்த தம்பதிகள் இருவருக்கும் ஐந்து வயதுடைய இசக்கியம்மாள் என்ற பெண் குழந்தை இருக்கிறார். 

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக பக்கத்து வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி இசக்கியம்மாள், அருகிலிருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து விபரீதம் தெரியாமல் சாப்பிட்டுள்ளார். இதனால் வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு சிறுமி அலறித்துடித்துள்ளார்.

என்னவென்று தெரியாது பதறிப்போன பெற்றோர் அங்குள்ள செங்கோட்டை மருத்துவமனைக்கு மகளை அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் முதலுதவி செய்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவர்கள் சிறுமி பிளீச்சிங் பவுடரை உட்கொண்டுள்ளதை உறுதி செய்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் உடல் எடையும் கணிசமாக குறைந்தது. இதனால் சிறுமி தற்போது எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார். இதனையடுத்து, மருத்துவர்களிடம் இதுதொடர்பாக பெற்றோர்கள் முறையிடவே, சிறுமியை மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

பெற்றோரின் வறுமை காரணமாக அவரை சென்னைக்கு கூட அழைத்துச் செல்ல முடியாத நிலையில், அரசு அல்லது தனியார் அமைப்புகள் குழந்தையை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக வீடுகளில் இருக்கும் பிளீச்சிங் பவுடரில் இருக்கும் குளோரினில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் உருவாக்கி செரிமானத்தை தடை செய்யும். 

இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று வலி மற்றும் தொண்டை வலி ஏற்பட்டு சாப்பிட முடியாத நிலை உருவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் கழிப்பறை மற்றும் குளியலறை போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் பிளீசிங் பவுடர்களை குழந்தைகள் எடுக்க முடியாத பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Shengottai 5 Aged Child Want Medical Help


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->