நீர் வரத்து அதிகரிப்பு எதிரொலி: குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க தடை.. ஐந்தருவியில் அனுமதி..! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து மக்கள் அனைவரும் அருவிகளில் நீராடி மகிழ்ந்து வந்தனர். ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக அருவிகளில் நீராட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. 

இதனால் உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை பெரும் ஏமாற்றத்தையே சந்தித்து வந்த நிலையில், கடந்த வாரங்களுக்கு முன்னதாக அருவிகளில் நீராட கட்டுப்பாடுடன் அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது பெய்து வந்த பருவமழை காரணமாக அவ்வப்போது அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால், குற்றாலம் மெயின் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்தது. 

இதனால் நேற்று முதல் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், நீர் வரத்து குறையவில்லை. இதனால் அருவியில் நீராட இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீராட நினைத்த பிற மாவட்ட சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். ஆனால், ஐந்தருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Kutralam Main Falls Public Visit banned Tempravorily by District Administration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->