டெண்டர் முறைகேடு வழக்கு குறித்த விசாரணை ஒத்திவைப்பு.!  - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்று அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., சார்பில்,  அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை விசாரித்த போலீசார், குற்றச்சாட்டுக்கு காரணம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. 

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம், தி.மு.க., தொடர்ந்த பொதுநல வழக்குகள், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் கொண்ட முதல் அமர்வின் முன் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி தன் மீது போலீசார் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான எஸ்.வி.ராஜூ ஆஜரானார். 

அப்போது, டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய கோரியும், எஸ்.பி.வேலுமணியின் மனுவை தள்ளுபடி செய்ய கோரியும் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. 

எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு தனி நீதிபதி முன்பாகத்தான் இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ வேலுமணிக்காக ஆஜராக முடியாது என்று கூறப்பட்டு இருந்த நிலையில், பின்னர் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, "முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறைக்காக ஆஜராகும் மத்திய அரசின் தரப்பு வக்கீல், வேலுமணிக்கு ஆதரவாக எப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும்?" என்று கேள்வி எழுப்பி வாதிட்டார்.  

மேலும், மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ''முன்னாள் அமைச்சர் வேலுமணி தனது நெருங்கிய உறவினர்களுக்கும், வேண்டப்பட்டவர்களுக்கும் டெண்டர்களை ஒதுக்கியதின் மூலம் தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளார். இதன்மூலம் அவர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் காரணமாகவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

அப்போது, வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.வி. ராஜூ, "இந்த வழக்கில் ஆஜராக மத்திய அரசின் அனுமதியை முறையாக பெற்றுள்ளேன். அறப்போர் இயக்கத்தின் பொதுநல மனு மற்றும் ஆர்.எஸ்.பாரதியின் குற்றவியல் மனு ஆகியவைகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட்டதால், வழக்கை ரத்து செய்ய கோரும் வேலுமணியின் வழக்கையும் சேர்த்து இந்த முதல் அமர்வே விசாரிக்கலாம்" என்றும் வாதிட்டார். 

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்சேபனை மனு மீதான உத்தரவை இன்று பிறப்பிப்பதாக உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் நீதிபதிகள் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தனர். அதில், டெண்டர் முறையீடு வழக்கில் வேலுமணி சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜர் ஆகலாம் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tender malepractise case investigation adjournment


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->