புத்தாண்டு கொண்டாட்டம் - மதுபோதையில் கத்தியுடன் சுற்றிய 10 per கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புளியந்தோப்பு பவுடர் மில்ஸ் சாலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அருகே மது போதையில் சிலர் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்துவதாக பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. 

அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது அவர்களை பார்த்ததும் அங்கிருந்த கும்பல் தப்பித்துச் சென்றது. அதில், ஒருவரை விரட்டி பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அந்த நபர் புளியந்தோப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பது, தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, புளியந்தோப்பு நெடுஞ்சாலை பெரியார் நகர் சந்திப்பு அருகில் சுற்றித்திரிந்த நான்கு பேரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதேபோல் புளியந்தோப்பு காந்திநகர் சந்திப்பு அருகே மதுபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். புத்தாண்டு தினத்தில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டியவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten peoples arrested for threat to peoples with knief in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->