3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல் ..மது பிரியர்கள் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, நகரப் பகுதிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில், திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, நகரப் பகுதிக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tasmac shops to remain closed for 3 days Wine lovers are shocked


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->