டாஸ்மாக் கடைகளில் 5, 10 ரூபாய் கொள்ளை.! டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தால், விற்பனையாளர்கள் மீது உரிய விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்துவரும் நிலையில், அப்படி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட தகவலின் படி, மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தால் 10,900 ரூபாய் அபராதமும் விற்பனையாளருக்கு விதிக்கப்படும்.

அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் கண்காணிப்பு குழுக்களை அமைத்து கண்காணித்து வருகிறது. கணக்கில் வராத பணம் பிடிபட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac extra amount issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal