தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆலயத்திற்கு ஏற்பட்ட நிலை.. முகம் சுளிக்கும் பக்தர்கள்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின், பிரசித்தி பெற்ற ஆலயம் கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் மழை நீர், குளம் போல் தேங்கி அசுத்தமடைந்து காணப்படுகிறது. இதனால் ஆலயத்திற்கு வரும்  சுற்றுலாப்பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலைப் போலவே, தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயமும், உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் தொல்லியல் துறை பராமரித்து வரும் ஆலயமாக திகழ்கிறது.

ஆலயத்தில் இருக்கும் சிற்ப அழகை ரசிப்பதற்காகவே ஆயில் நாடுகளிலிருந்தும், சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்.

மழையின் காரணமாக, ஆலயத்தின் வெளிப் பிரகாரம், முன் மண்டபம், பெரியநாயகி அம்பாள் சன்னதி போன்ற பகுதிகளில் நீர் தேங்கி பாசி பிடித்து துர் நாற்றம் வீசுகிறது. இதனால் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tanjore temple filled by dirty rain water


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->