டான்செட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் வெளியீடு.!
tancet exam result published
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில், தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கும், பொறியியல் கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் போன்ற முதுநிலை படிப்புகளில் சேருவதற்கும் "டான் செட்" எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 36,139 பேர் எழுதினர்.
இந்த நிலையில், டான்செட் நுழைவுத் தேர்வு முடிவினை அண்ணா பல்கலைக்கழகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளமான tancet.annauniv.edu என்ற பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்கள் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழை வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tancet exam result published