ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 மாதங்களுக்கு தடை! இம்மானுவேல் சேகரன் குருபூஜை, தேவர் குருபூஜை எதிரொலி!
TamilNadu Ramanathapuram IMMANUEL Devar Guru Pujai
பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா, கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாக்களை முன்னிட்டு 2 மாதங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 30ஆம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் போராட்டங்களுக்கு முறையான அனுமதி பெற்று நடத்தலாம்.
குருபூஜை விழாவின் கலந்து கொள்ள வரும் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ மேற்கூரைகளில் பயணிக்கவோ அனுமதியில்லை.
வாகனங்களில் சாத, மத உணர்வை தூண்டும் வாசகங்கள் மற்றும் பதாகைகள் இடம்பெற்றிருக்கக் கூடாது, சாதி பெயருக்கான முழக்கங்கள் எழுப்ப கூடாது.
English Summary
TamilNadu Ramanathapuram IMMANUEL Devar Guru Pujai