கோ.இளவழகனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்மண் பதிப்பக நிறுவனர் தமிழ் நூல்களோடு வாழ்ந்த கோ.இளவழகனார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு சி.பி.ஐ.எம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அரிய தமிழ் நூல்களை வெளியிட்டு தமிழ் மொழிக்கு தொண்டு செய்த தமிழ்மண் பதிப்பகத்தின் நிறுவனர்   கோ.இளவழகனார் (73) இன்று காலை காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தஞ்சை, ஒரத்தநாட்டில் பிறந்த அவர் இளம் வயதிலேயே ஊர் நல வளர்ச்சிக்கழகம் என்ற சமூக அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் நலப்பணிகளை ஆற்றியவர். தமிழ் மொழியின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாகவும், பாவாணர் மீது கொண்ட பற்றின் காரணமாகவும் பாவாணர் படிப்பகத்தை துவக்கி இளம் தலைமுறையினருக்கு தமிழ் ஆர்வத்தை ஊட்டியவர். மது ஒழிப்புக்காக போராடியவர்.

தமிழ்மண்  பதிப்பகத்தை துவக்கி தமிழுக்கு பெரும் தொண்டு செய்யும் நோக்கோடு தமிழ் மொழியின் திண்மையை, இலக்கிய செறிவினை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தும் பணியில்  வரலாற்று சாதனை படைத்தவர். 30க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்களின் நூல்களை தேடிப்பிடித்து அனைத்தையும் தொகுத்து பல நூல் தொகுதிகளாக வெளியிட்டவர். உதாரணமாக, தேவநேயப்பாவாணரின் அனைத்து நூல்கள், பன்மொழிப்புலவர் க.அப்பாத்துரையாரின் 40க்கும் மேற்பட்ட நூல்கள், வரலாற்று அறிஞர் வே.சாமிநாத சர்மா, திரு.வி.க., மயிலை சீனி வேங்கடசாமி  உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்களின் நூல்களை தொகுத்து வெளியிட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் 110 தொகுதிகளாக தொகுத்து முதல்கட்டமாக 64 தொகுதிகளை  வெளியிட்டுள்ளார்.  இவரது முயற்சியின் விளைவாக தமிழ் இலக்கிய நூல்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கிடைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளது.   இதன் மூலம் தமிழுக்கு இவர் ஆற்றிய பணி மகத்தானதாகும்.

பதிப்பகத்தை ஒரு வியாபாரமாக கருதாமல் தமிழ்மொழிக்கு தான் செய்கிற தொண்டு என்கிற முறையில் பதிப்பகத்தை மிகச்சிறந்த முறையில் நடத்தி வந்தார். இவரது வாழ்க்கைப்பயணம் நூல்களோடு அமைந்ததாகும். அனைவரோடும் பழகுவதில் மிகவும் எளிமையானவர். இத்தகைய பணிகளை ஆற்றிய கோ.இளவழகனாரின் மறைவு  தமிழ் பதிப்பக உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், பதிப்பக ஊழியர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM K Balakrishnan Regret about K Elavalaganar Passed Away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->