எதிர்க்கட்சியே வியக்கும் வகையில் பொன்னான ஆட்சி - தமிழக முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட மூக்கு மேல் விரல் வைத்து பாராட்டும் பெருமைக்குரிய அரசாக அம்மாவின் அரசு இருக்கிறது என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியாக பேசினார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் உரையாற்றுகையில், " என் தலைமையிலான ஆட்சி இன்று முடிந்துவிடும், நாளை முடிந்துவிடும் என்று திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வந்தார்கள். அவை அனைத்தையும் முறியடித்து இன்று வெற்றிகரமாக ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வெற்றிநடைபோடும் தமிழகத்தை ஏற்படுத்தியுள்ளோம். 

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட மூக்கு மேல் விரல் வைத்து பாராட்டும் பெருமைக்குரிய அரசாக அம்மாவின் அரசு இருக்கிறது. சிறப்புமிகு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு எனது நன்றிகள், பாராட்டுக்கள். 

அமைச்சர்களின் சிறப்பான செயல்களால் தேசிய அளவில் பல பாராட்டுகளை பெற்று தந்துள்ளனர். அம்மா கடந்த சட்டப்பேரவையில் கழகம் எனக்கு பின்னர் 100 வருடம் சிறப்பான ஆட்சி செய்யும் என்று தெரிவித்தார். சிறந்த ஆட்சி அமைந்ததற்கு சட்டபேரவை உறுப்பினர்களுக்கு மிகுந்த நன்றிகள். 

அவையில் நடுநிலையோடு செயல்பட்டு, சூடான விவாதம் நடைபெற்றாலும் பக்குவமாக தமிழகத்திலேயே முன்மாதிரி சட்டமன்றம் பெயரை எடுக்கவைத்த சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணைத்தலைவர், அரசு கொறடா அவர்களுக்கும் நன்றிகள். ஆட்சி சிறப்பாக செயல்பட உதவி செய்த அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்களுக்கும் மிகுந்த நன்றிகள். 

அரசின் திட்டங்கள் வேகமாக, துரிதமாக என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டு திட்டத்தை செயல்படுத்த உதவிய முதல்வர் துறை அதிகாரிகளுக்கும் நன்றிகள். பல்வேறு நலத்திட்டங்களை வெற்றிகமாக மக்களிடையே கொண்டு சேர்த்து மக்களிடம் அதிமுக நன்மதிப்பை பெற்றுள்ளது. 

காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம், டெல்டா பகுதியை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை நாம் வெற்றிகமாக செயல்படுத்தியுள்ளோம் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Speech at Tamilnadu Assembly 27 Feb 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->