தயக்கம் இன்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் - தமிழக முதல்வர் அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


மக்கள் தடுப்பூசியை தயக்கம் இல்லாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செலுத்திக்கொண்டார். இதன்பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கூறி அறிவுறுத்தினர்.

இந்த பேட்டியில், " கொரோனா வைரஸ் நோய் எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ள தொற்று நோய். நோயில் இருந்து விடுபட அரசு தடுப்பூசி வழங்கி வருகிறது. அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2682 அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 924 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தற்போதுவரை 36 இலட்சத்து 14 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. 30.47 இலட்சம் கோவிட்சீல்டு தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. 11 இலட்சம் பேர் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எதோ ஒரு காரணத்திற்காக நாம் தினமும் வெளியே சென்று வர வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா பரவும் சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

மக்கள் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். இனிவரும் காலங்களிலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Request to Inject Corona Vaccine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->