BREAKING : தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 9 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.

நெடுந்தேவு அருகே ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், 2 விசைப்படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர்.

இதில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதில் கைதான 9 மீனவர்களும் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல் மரியாதை உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu 9 fishermen release arrested by srilanka coastal guard


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->