சுனாமியை எதிர்கொள்ள தமிழகத்தில் மீட்பு படையினருக்கு ஒத்திகை பயிற்சி..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்தண்டி நயினார் குப்பத்தில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் இணைந்து, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர். 

மேலும், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டால் அந்த தகவல் கடலோர பகுதிகளுக்கு எவ்வாறு சென்றடைவது, மக்களை அப்புறப்படுத்தி முகாம்களில் தங்க வைப்பது, கடலில் சிக்கித் தவிப்பர்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சியில், தீயணைப்புப் படையினர், தமிழ்நாடு மீட்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையினர், வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள்  ஆகியோர்  பங்கேற்றனர். மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அதிகாரிகள், மீட்பு ஒத்திகையை டிரோன் கேமராக்கள் மூலமாக ஒருங்கிணைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளர் தாக்கர், பேரிடர்களை எதிர்கொள்ள தமிழ்நாடு தயாராக உள்ளது. மாநிலம் முழுவதும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர், அதற்காக அனைத்து ஒத்திகைகளும் நிறைவாக உள்ளது

இவரைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 இடங்களை தேர்வு செய்து வெள்ளம் ஏற்பட்டால் ஏற்படும் அபாயத்தை எரிர்கொள்வது குறித்து ஒத்திகை நடைபெற்றது. இதற்காக, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை. 

பேரிடர் இப்போதுதான் வரும் என எதிர்பார்க்க முடியாது, வரும்போது தற்காத்துக்கொள்ள வேண்டும்.  இதற்காக, 5,500க்கும் மேற்பட்ட ஆப்தமித்ரா தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பேரிடர் ஏற்பட்டால் அதிகாரிகளும், தன்னார்வலர்களும் அந்த இடத்திற்கு வருவதற்கு அரைமணி நேரமாகும் என்று  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnaadu face to tsunami Rehearsal training for rescue forces


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->