ரஞ்சித்தை கிழித்து தொங்கவிடும் தமிழிசை.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கிய ரஞ்சித் அரசியல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். 

இந்நிலையில், பா. ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ராஜராஜசோழன் தங்கள் சமூகத்தின் நிலத்தை அபகரித்து விட்டதாக கூறினார். 

இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் பலரும் ட்விட்டரில் ரஞ்சித்தை கலாய்த்து வருகின்றனர். #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் பலரும் பா.ரஞ்சித் குறித்த விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இது நேற்று இந்திய அளவில் டிரெண்டானது.

இவ்வாறு, ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை, "ராஜராஜ சோழன் குறித்து இயக்குனர் ரஞ்சித் கூறிய கருத்து தவறு, அவர் பேச்சை பேச்சாகவே எடுத்துக்கொள்ள முடியாது" என அவர் தெரிவித்துள்ளார்.

English Summary

tamilisai warning to ranjith


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal