அரியலூர் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரனுக்கு தமிழிசை நேரில் அஞ்சலி!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.

இந்த இராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழகத்தை சார்ந்தவர் என்ற தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தா.பழூர் கார்குடி கிராமத்தை சார்ந்தவர் சின்னையன். இவரது மனைவியின் பெயர் சிங்காரவள்ளி, விவசாய குடும்பமான இவர்களின் இரண்டாவது மகன் சிவச்சந்திரன் (33).

அதன் படி., கடந்த 2010 ம் வருடத்தின் போது நடைபெற்ற இராணுவத்திற்க்கான தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகி., இராணுவ வீரனாக பணியாற்ற தொடங்கினார். தற்போது சிவச்சந்திரனின் வீரமரணமும் இவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவச்சந்திரனுக்கு நாட்டின் மீதான பற்று சிறுவயதில் இருந்து அதிகம் என்பதால்., இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நேற்று முன்தினம் துணை ராணுவத்தினரின் வாகனத்தின் மீது, பாகிஸ்தான் தீவிரவாதக் கும்பல், 350 கிலோ எடை கொண்ட வெடி மருந்துகளுடன், தற்கொலைப் படை லாரியைக் கொண்டு மோதி வெடிக்கச் செய்தது.

இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு, இந்திய துணை ராணுவத்தினர் 41 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

வீரர் சிவசந்திரனின் உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது குடும்பத்தினர் அவரது  உடலை விவசாய நிலத்தில் அடக்கம் செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, பாஜக தமிழக தலைவர் சிவசந்திரனின் உடலை காண செல்வதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து, தமிழிசை, "திருச்சியிலிருந்து அரியலூர் காருகுடி கிராமத்திற்கு கனத்த இதயத்தோடு சென்றுகொண்டிருக்கிறேன்.



 

காஷ்மீரில் இதயமில்லாத தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த நம்தமிழகத்தின் வீரத்தம்பி சிவச்சந்திரனுக்கு அஞ்சலிசெலுத்த...." என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai soundararajan will goes to ariyalur kargudi.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->