#Breaking: விவசாயியாக எனக்கு தெரியும்.. நீங்க கொஞ்சம்...... முதல்வர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.! - Seithipunal
Seithipunal


வேளாண் மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த மசோதா எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரும் எதிர்ப்பை சந்தித்த நிலையில், பெரும் போராட்டமே வடமாநிலங்களில் நடந்தது. 

இந்த நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள விவசாய சட்டங்களால், தமிழக விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் எதிர்பாராத விலை வீழ்ச்சி பாதிப்பு தவிர்க்கப்படும். 

விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும் என்பதை விவசாயியாக நான் உணர்ந்துள்ளேன். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் விளைபொருட்கள் சட்டத்தை, எதிர்க்கட்சி தலைவர் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலைமை தமிழகத்திற்கு பொருந்தாது. விவசாய மசோதாவில் உள்ள சரத்துக்களால் ஏற்படும் நன்மைகளை, நான் விவசாயியாக உணர்ந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறேன். 

எதிர்க்கட்சி தலைவரை போல விவசாயிகளின் கஷ்டத்தை நான் அறியாமல் இல்லை. எனக்கு விவசாயம் குறித்த அனைத்தும் தெரியும். ஒருமுறை அல்ல.. ஓராயிரம் முறை நான் விவசாயி என்று கூறுவதில் பெருமையடைகிறேன் " என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilandu CM Edappadi Palanisamy Welcomes Former Agriculture Bill


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->