#சென்னை | தமிழக அரசின் குளிர்சாதன பேருந்தில் புகை - அலறியடித்து தப்பிய பயணிகள்! - Seithipunal
Seithipunal


தாம்பரம் அருகே பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அரசு குளிர்சாதன பேருந்தில் திடீரென புகை ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து கொண்டு தப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இன்று மாலை 6.45 மணிக்கு, தாம்பரம் பகுதியில் வந்து கொண்டிருந்த தமிழக அரசின் குளிர்சாதன பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை வந்துள்ளது.

புகை வருவதை கண்ட பயணிகள் அலறி கூச்சல் இடவே, உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும், பேருந்தில் ஏற்பட்ட புகையை தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் தாம்பரம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முதல்கட்ட தகவலின்படி குளிர்சாதன மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறால் பேருந்தில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அண்மைய செய்தி : தென்னக ரயில்வேக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரங்களில் ரயிலை 30 கி.மீ. வேகத்திலேயே இயக்க வேண்டும் என்று, தென்னக ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறினால், கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவையை ரத்து செய்ய நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tambaram Govt AC Bus Some issue


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை



Advertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை




Seithipunal