அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுங்கள்..கமிஷனர் அருண் எச்சரிக்கை!
Take action on emergency calls Commissioner Arun warns
சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீசாருக்கும் , அவசர அழைப்புகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்க காவல்துறை பல்வேறு நடைமுறைகளை கையாண்டுவருகிறது.குறிப்பாக பெருநகர காவல் எல்லையில் குற்றங்கள் மற்றும் பல்வேறு உதவிகள் கேட்டு கட்டுப்பாட்டு அறைக்கு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட அவசர அழைப்புகள் வந்தாலும் இந்த அழைப்புகளுக்கு போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.சமீபகாலமாக சென்னையில் குற்றச்சம்பவங்கள் அதிரித்துள்ளதாக அரசியல் கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்தன.
இந்த நிலையில் , சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீசாருக்கும் , அவசர அழைப்புகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும், தாமதமாக சம்பவ இடத்திற்கு சென்றாலும் சம்பந்தபட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மேலும் , அவசர அழைப்புகளுக்கு காவல் அவசர உதவி எண் 100, பெண்கள் உதவி மைய எண்1091, குழந்தைகள் உதவி மைய எண்1098, மூத்த குடிமக்கள் உதவி மைய எண்1253, பந்தம் திட்டத்தின் கீழ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவி எண் 9499957575, காவல் ஆணையாளர் குறுஞ்செய்தி புகார்கள் அனுப்பும் எண்9500099100, மற்றும் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நபர்களை மீட்பதற்கான "காவல் கரங்கள்" உதவி எண் 9444717100 மூலம் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Take action on emergency calls Commissioner Arun warns