மதுகுடிக்க பணம் கேட்ட மகன்.! கொடுக்க மறுத்த தாய்க்கு நேர்ந்த பரிதாபம்.!  - Seithipunal
Seithipunal


மதுவினால் பல்வேறு பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றது. பல குடும்பங்களும் இதன் காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு இதன் பாதிப்புகளை கண் முன்னே பார்த்த போதும், இந்த குடிப்பழக்கத்தை பலரால் மாற்றி கொள்ள முடிவதில்லை. 

இன்றைய இளைஞர்களும் பெரும்பாலும் குடிப்பழக்கத்திற்கு மற்றும் பல்வேறு போதைகளுக்கு அடிமையாகியுள்ளனர். இப்படி குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உயிரை விட்ட ஒரு கதையை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். 

Image result for drinks seithipunal

கோவையில் அருகே குனியமுத்தூரை சேர்ந்த ராஜன் என்பவரது, மகன் தான் கிருஷ்ணகுமார் (வயது 36) என்னும் கூலித் தொழிலாளி. இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இந்நிலையில், நேற்று இவர் தனது தாய் சாரதாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். 

ஆனால், அவரது தாயார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதன் காரணமாக, மிகுந்த மனவேதனைக்குள்ளாகி வாழ்க்கையில் விரக்தி அடைந்துள்ளார். இதன் காரணமாக அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக தகவல் தெரிவித்து இருந்தார். கேள்விப்பட்ட போலீசார் உடனடியாக விரைந்து வந்து, உடலை மீது கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

suicide in covai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->