இந்தியாவில் மாநிலங்கள் இடையே முதல் மெட்ரோ ரயில் சேவை.! அதுவும் நம்ம தமிழ்நாட்டில்.!! எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே முதன்முறையாக இரு மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் சேவைக்கான முதற்கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா இடையே போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணி தொடங்கியுள்ளதாக மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்க முன்மொழிந்து கர்நாடகா அரசு சார்பாக மத்திய அரசுக்கு  மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பியிருந்தது.

அதற்கு அண்டை மாநிலத்தில் உள்ள பகுதியை சம்பந்தப்பட்ட மாநில அரசுடன் கலந்தாலோசித்து பெருநகரப் பகுதிக்கு விரிவுபடுத்தலாம் என கடிதத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு இசைவு தெரிவிக்கும் வகையில் பெங்களூரு மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கலாம் என கர்நாடக அரசும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கர்நாடக மாநிலத்தின் பொம்மசந்திரா மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து ஒசூர் 20.5 கிமீ தொலைவில் உள்ள நிலையில் 11.7 கிமீ கர்நாடகா மாநிலத்திலும், 8.8 கிமீ தமிழ்நாட்டிலும் உள்ளது. இரண்டு இடங்களையும் இணைக்கும்பொது மாநிலங்கள் போக்குவரத்து அமைப்புக்கான திட்டச் செலவை பகிர்ந்து கொள்ளாாமல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Study begins to start metro train service between TamilNadu and Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->