சி.பி.எஸ்.இ. தேர்வில் மாணவர்கள் சாதனை..நேரில் சென்று பாராட்டி வாழ்த்திய கலெக்டர் சதீஷ்! - Seithipunal
Seithipunal


12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலெக்டர் சதீஷ் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

2024-25 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வில் தர்மபுரி அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த தேர்வுகளில் இந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பிளஸ்-2  சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் இந்த பள்ளி மாணவிகள் தூபா, கீர்த்தனா ஆகியோர் 500-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.  மாணவர் சுசீந்தர், மாணவி ருதுவர்ஷினி ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தையும், மாணவிகள் மஹதி பிரியதர்ஷினி, அனுவர்ஷினி ஆகியோர் 485 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 

இதேபோன்று 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் இந்த பள்ளி மாணவி ஆராதனா 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், மாநில,  மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.  இதேபோன்று மாணவிகள் யாழினி, ஆஷிபா பர்ஹானா ஆகியோர் 496  மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவி தன்வி 494 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்து சாதனை படைத்தனர். மேலும் இந்த பள்ளியில் 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 பேர் பெற்றுள்ளனர். 

இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி பொன்னாடை அணிவித்து ரொக்க பரிசு, கேடயம் மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினார். இதேபோல் துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் கே.தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், பள்ளி நிர்வாக அலுவலர் ஜே. கார்த்திகேயன், பள்ளி முதன்மை முதல்வர் சி. சீனிவாசன், முதல்வர் பி.செந்தில்முருகன், துணை முதல்வர் எஸ்.ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர் எம். ஞானகவிதா, பி.எஸ். தீபா, துணைக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஹினாபானு மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Students excel in the CBSE exam Collector Satish praised and congratulated them in person


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->